உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொங்கல் திருநாளை வரவேற்க மஞ்சள் கன்று தயார்

பொங்கல் திருநாளை வரவேற்க மஞ்சள் கன்று தயார்

பள்ளிப்பட்டு:பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பிடிக்கும் மஞ்சள், கரும்பு உள்ளிட்டவை ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு சுற்றுப்பகுதியில் பாரம்பரியமாக பயிரிடப்பட்டு வருகின்றன. பொங்கல் பூஜையின் போது பொங்கல் பானையை அலங்கரிக்கவும், தோரணம் அமைக்கவும் மஞ்சள் கன்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.மஞ்சள் கிழங்குக்காக பயிரிடுவதை காட்டிலும், பொங்கல் பண்டிகையில், பூஜைக்காக பயன்படுத்தவே மஞ்சள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது.தற்போது, செழிப்பாக வளர்ந்துள்ள மஞ்சள் கன்றுகள், வரும் செவ்வாய்கிழமை பொங்கல் பண்டிகையின் போது சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வர விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதேபோல, வைக்கோல் பிரிமனைகள், தேங்காய் சிரட்டை அகப்பை தயாரிப்பிலும் பகுதிவாசிகள் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ