உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில், அலுவல் சாரா உறுப்பினராக சேர, வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நல வாரியம், கடந்த 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த வாரியம் அவ்வப்போது மறு சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு அலுவலர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்டுள்ளது.இந்த வாரியத்தின் அலுவலர் சாரா உறுப்பினர்கள், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுவர். அதன்படி, தற்போது புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால் பார்வையற்றோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களுக்கு சேவை புரியும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகள் விண்ணப்பிக்கலாம்.திருவள்ளுர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று, வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ