உடற்பயிற்சி செய்த வாலிபர் உயிரிழப்பு
பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த, வல்லுார் மின் நகரில் வசித்தவர் வினோத்குமார், 35; திருமணம் ஆகாதவர். வல்லுார் அனல் மின் நிலைத்தில், ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்தார்.வழக்கம் போல நேற்று காலை, அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர், உயிரிழந்தார். மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.