உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பஸ் கண்ணாடி உடைப்பு வாலிபர் கைது

பஸ் கண்ணாடி உடைப்பு வாலிபர் கைது

திருத்தணி:தனியார் பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.திருத்தணி - நாகலாபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நான்கு நாட்களுக்கு முன், வேலஞ்சேரி காலனியைச் சேர்ந்த தனியார் ஊழியர் ஒருவரை, தாழவேடு காலனி வாலிபர்கள் தாக்கினர்.இதை கண்டித்து, வேலஞ்சேரி காலனி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த தனியார் பேருந்தின் கண்ணாடியை வாலிபர் ஒருவர் உடைத்துவிட்டு தப்பிச் சென்றார்.இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பசுபதி, 26, என்பவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ