உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா பறிமுதல் வாலிபர் கைது

குட்கா பறிமுதல் வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி,:கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் ரோந்து சென்றபோது, சிப்காட் ஏ.ஆர்.எஸ்., சாலையில் பெரிய பையுடன் டூ-வீலரில் சென்ற நபரை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், 10 கிலோ எடை குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. டூ-வீலருடன் குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பீஹார் மாநிலத்தை சேர்ந்த சரோஜ் ஷா, 34, என்பவரை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தை ஒட்டி, கடை நடத்தி வரும் குமாரி, 45, என்பவருக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !