உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கல்லுாரி மாணவிக்கு தொல்லை வாலிபர் கைது

கல்லுாரி மாணவிக்கு தொல்லை வாலிபர் கைது

பள்ளிப்பட்டு:கல்லுாரி மாணவிக்கு தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். பள்ளிப்பட்டு அடுத்து உள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது மாணவி, ஆர்.கே.பேட்டை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் கல்லுாரி பேருந்தில் சென்று வருகிறார். இந்த மாணவிக்கு, அரவாசபட்டடை கிராமத்தை சேர்ந்த ஹேமந்த், 27, என்பவர் கடந்த சில நாட்களாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று காலை அந்த மாணவி கல்லுாரி பேருந்தில் சென்று கொண்டிருந்தார். பேருந்து, பள்ளிப்பட்டு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மாணவ- மாணவியரை ஏற்றி செல்ல காத்திருந்தபோது, அந்த இடத்திற்கு வந்த ஹேமந்த், அந்த மாணவியிடம் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிப்பட்டு போலீசார், ஹேமந்தை கைது செய்தனர். விசாரணையில், அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், கடந்த சில நாட்களாக, மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை