உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இயந்திரத்தை பழுது பார்த்தபோது வெட்டுப்பட்டு வாலிபர் பலி

இயந்திரத்தை பழுது பார்த்தபோது வெட்டுப்பட்டு வாலிபர் பலி

திருநின்றவூர்: திருநின்றவூரில், மரம் அறுக்கும் இயந்திரத்தை பழுது பார்த்த போது, திடீரென இயந்திரம் இயங்கியதால், உடல் முழுதும் வெட்டப்பட்டு, கார்பெண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். திருநின்றவூர், பள்ளகழனி, திரு.வி.க., தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 34; கார்பெண்டர். திருமணமாகாத இவர், தாய் பானு, 60, என்பவருடன் வசித்து வருகிறார். அவரது தந்தை பயன்படுத்திய சிறிய மரம் அறுக்கும் இயந்திரம், வெகு நாட்களாக பயன்படுத்தப்படாமல் பழுதாகி இருந்தது. நேற்று காலை, கார்த்திக் அதை பழுது பார்த்த போது, இயந்திரம் திடீரென இயங்கியதில், இடது கையில் வெட்டுப்பட்டு வலியால் துடித்து, கீழே விழுந்தார். அவர் மீது இயந்திரம் விழுந்து, கழுத்து மற்றும் உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ