உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி

சாலை தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி

ஊத்துக்கோட்டை:வெங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு, 44. ஆட்டோ ஓட்டுநர். இவரது மகன் பிரவீன், 21, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த, 15ம் தேதி இரவு தன் யமஹா எம்-15 பைக்கில், பெரம்பூரில் இருந்து வெங்கல் சென்று கொண்டு இருந்தார்.காரணிபாட்டை கிராமம் அருகே சென்ற போது நிலை தடுமாறி சாலை தடுப்பில் பைக் மோதியது. இதில் பிரவீன் தலையில் பலத்த காயம் அடைந்தார். ச108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். வெங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி