மேலும் செய்திகள்
மாநகராட்சி கமிஷனராக சரண்யா பொறுப்பேற்பு
28-Jun-2025
ஆவடி:போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த வாலிபரின் மரணம் தொடர்பாக, உரிமையாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி, காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரபு, 36; கற்பூர வியாபாரி. இவரது மனைவி தர்மலட்சுமி, 30. பிரபு மது பழக்கத்திற்கு அடிமையானவர். கடந்த டிச., 21ம் தேதி, ஆவடி அடுத்த மோரை பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதே மாதம் 27ம் தேதி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு பிரபு இறந்ததாக கூறப்படுகிறது. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இந்த நிலையில், கடந்த 18ம் தேதி பெறப்பட்ட தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில், பிரபுவின் உடலில் உள்காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, போலீசார் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தின் உரிமையாளர்கள் ஷில்பா கலா, 34, மற்றும் அவரது கணவர் லாசர், 42, ஆகியோரை, கொலை நோக்கம் இல்லாத மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவில் கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.
28-Jun-2025