உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / உவர்நில சீர்திருத்த நெல்சாகுபடிதொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி

உவர்நில சீர்திருத்த நெல்சாகுபடிதொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் பட்டுக்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கலர், உவர் நில சீர்த்திருத்த நெல்சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி மற்றும் விவசாய இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டது.பட்டுக்கோட்டை வேளாண் மை ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் நடராஜன் தலைமையில் நடந்த விழாவில் உதவி பேராசிரியர் மாரிமுத்து மண் பரிசோதனை செய்வதின் முக்கியத்துவம் குறித்தும், கலர் உவர் நில சீர்திருத்தம் குறித்து விளக்கி பேசினார். திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் நடேசன் நெல் சாகுபடியில் உள்ள குறைகள் பற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடி நெல் சாகுபடி குறித்து விளக்கம் அளித்தார்.வேளாண் விதை பொருட்களான ஜிப்சம், தட்கை பூண்டு, விதை நெல், ரசாயண உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், உயிர் உரங்கள், பூச்சி கொல்லி, கலைக் கொல்லி மருந்துகள், பச்சை வண்ண அட்டை மற்றும் கோனா விடர் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் வேளாண்மை துணை அலுவலர் தவமணி, தொழில்நுட்ப உதவியாளர் வேதநாயகி, உதவி வேளாண்மை அலுவலர்கள் மகேஷ், ஜோதிகணேசன், ரமேஷ்குமார், முதுநிலை ஆராய்ச்சியாளர் சக்கரவர்த்தி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி