உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / சுவர் விழுந்து கொத்தனார் பலி

சுவர் விழுந்து கொத்தனார் பலி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், சுவர் இடிந்து விழுந்ததில் கொத்தனார் பலியானார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, ஆட்டூர் சாலையை சேர்ந்தவர், ஆனந்தராஜ், 38; கொத்தனார். இவரது மனைவி, மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். குழந்தைகள் இல்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, திருத்துறைப்பூண்டியில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக, ஆனந்தராஜ் கூரை வீட்டில் மண்சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி, அதே இடத்தில் ஆனந்தராஜ் இறந்தார். திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி