உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / பஸ் கண்ணாடி உடைப்பு : மூன்று பேர் மீது வழக்கு

பஸ் கண்ணாடி உடைப்பு : மூன்று பேர் மீது வழக்கு

திருவாரூர்: பேரளம் நகர தி.மு.க., செயலாளர் படுகொலையை கண்டித்து போஸ்டர் ஒட்டியதில் ஏற்பட்ட ரகளையில், பஸ் கண்ணாடியை ஒரு கும்பல் அடித்து, உடைத்து சேதப்படுத்தியது.திருவாரூர் மாவட்டம் பேரளம் தி.மு.க., நகர செயலாளராக இருந்து வந்த பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் பேரளத்தில் பல இடங்களில் கடைகளை மூடச்சொல்லியும், கண்டன போஸ்டர்களை ஒட்டினர்.அப்போது, கும்பகோணத்திலிருந்து சேஷமூலை என்ற ஊருக்கு சென்ற அரசு பஸ்ஸை பேரளத்தில் வழிமறித்து போஸ்டர்களை ஒட்டினர். அப்போது, ஏற்பட்ட தகராறில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, ஒரு கும்பல் சேதப்படுத்தியது. இதுதொடர்பாக பேரளம் போலீஸ் ஸ்டேஷனில் பஸ் டிரைவர் முருகேசன் அளித்த புகாரின் பேரில், பேரளம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவராமன், ராஜ்பாபு, மணிகண்டன் ஆகிய மூவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ