உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / காஸ் சிலிண்டர் டோக்கன் மறுப்பு திருவாரூரில் திடீர் சாலைமறியல்

காஸ் சிலிண்டர் டோக்கன் மறுப்பு திருவாரூரில் திடீர் சாலைமறியல்

திருவாரூர்: திருவாரூரில் காஸ் சிலிண்டர் சப்ளைக்கான டோக்கன் சரிவர வழங்காத ஏஜன்ஸியை கண்டித்து, பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருவாரூர் வடக்குவீதியில், 'இன்டேன்' காஸ் நிறுவனத்தின் ஏஜன்ஸியாக, பிரியா காஸ் ஏஜன்ஸி செயல்பட்டு வருகிறது. திருவாரூர் நகரில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இங்கு, 24 சிலிண்டர்களை பெற ஒரு டோக்கன் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டோக்கன் பெறாத வாடிக்கையாளருக்கு சிலிண்டர் சப்ளை செய்யப்படுவது இல்லை.தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் டோக்கன் வரும்போது, தினமும் ஐம்பது பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. மீதமுள்ளவர்கள் திரும்பி அனுப்பப்படுகின்றனர். நேற்று வழக்கம்போல டோக்கன் வாங்க வந்தவர்களின் பெரும்பானோர் திரும்ப அனுப்பப்பட்டனர். ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், வடக்குவீதியில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த, திருவாரூர் மாவட்ட டி.ஆர்.ஓ., லெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் துரைப்பாண்டியன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். சாலைமறியலில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர். 'ஏஜன்ஸியில் உள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, அவர்களின் வரிசை எண்படி, எந்தெந்த நாட்களில் டோக்கன் வழங்கப்படும் என்பதையும், விடுபட்டவர்களுக்கு எந்த நாட்களில் வழங்கப்படும் என்பதையும் முன்கூட்டியே தெரிவித்து, முறையான அனுமதி பெற்ற பின்னரே டோக்கன் வழங்க வேண்டும். அதுவரை சிலிண்டர் சப்ளை நிறுத்தக்கூடாது' என்று டி.ஆர்.ஓ., லெட்சுமி ஏஜன்ஸிக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.jayaram
செப் 06, 2025 08:44

மக்கள் நேர்மையான முறையில் பட்டா வாங்க அதற்கான ஆதாரங்களை மட்டும் சமர்பித்தால் போதும் இதை ஆன்லைனில் பதிவு செய்து விட்டு ஒப்புகை சீட் மட்டும் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அலையாதீர்கள் பட்டா வீடு தேடி வரும் 90 நாட்களுக்குள் வரவில்லை என்றால் consumer கோர்ட் மூலம் பெறமுடியும். இது எல்லா ஆதாரங்களையும் சரியாக வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பொருந்தும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை