உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / அரசு பள்ளிக்கு அறிவியல் ஆய்வக பொருள் சென்னை சாய்ராம் கல்விக் குழுமம் வழங்கல்

அரசு பள்ளிக்கு அறிவியல் ஆய்வக பொருள் சென்னை சாய்ராம் கல்விக் குழுமம் வழங்கல்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அடுத்த நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்னை சாய்ராம் கல்வி குழுமத்தின் சார்பில் ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள அறிவியல் ஆய்வக பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 2009 - 2010 கல்வி ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தில் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வு கட்டிடம் கட்டுவதுக்கு சாய்ராம் கல்வி குழுமத்தின் சார்பில் ரூபாய் 4.67 லட்சம் வைப்பு தொகையாக வழங்கப்பட்டது. கடந்த 2010 - 2011ம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பொது மக்கள் பங்கு தொகையாக ரூபாய் இரண்டு லட்சம் சாய்ராம் கல்வி குழும தலைவர் லியோமுத்து வழங்கினார்.அதோடு இல்லாமல் தற்போது ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள ஆய்வக பொருட்கள், ஆய்வக தடவாளங்கள் ஆகியவற்றை பள்ளி தலைமையாசிரியர் செல்லத்துரை ஆசிரியர்கள் அன்புகுமார் வெங்கடேஷன், யோகராஜன், ஆகியோரிடம் இலவசமாக வழங்கியுள்ளார். திருத்துறைப்பூண்டி எம்.எல். ஏ., உலகநாதன் ஆய்வக பொருட்களை பள்ளிக்கு வழங்கி பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார். மேற்கண்ட உதவிகளை வழங்கிய லியோமுத்துவிடம் இருந்து இந்த உதவிகளை பெற்று தந்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ., உலகநாதன், நெடும்பலம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாஸ்கர் ஆகியோருக்கு பெற்றோர், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ