மாற்று திறனாளியை தாக்கிய தலைமை காவலர் சஸ்பெண்ட்
திருவாரூர்:ஓடும் ரயிலில், மாற்றுத்திறனாளி பயணியை தாக்கிய,தலைமை காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.திருவாரூர் தாலுகா, மாவூர் அருகே, தென் மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி,53. இவர்,நீரிழிவு நோய் காரணமாக, ஒரு கால் இழந்தவர்.மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றுள்ளார்.சென்னை,பெரம்பூரில், குடும்பத்துடன் வசித்து வருகிறார்.கடந்த,சில தினங்களுக்கு முன்,சொந்த ஊருக்கு வந்துள்ளார்.கடந்த,1ம்தேதி,மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில்,சென்னைக்கு செல்ல, ஊனமுற்றோருக்கான பெட்டியில், மன்னார்குடியில் ஏறியுள்ளார்.இவர்,பயணம் செய்த பெட்டியில், நீடாமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் பழனிவேல்,45 என்பவர், மாற்றுதிறனாளி பெட்டியை திறக்க சொல்லியுள்ளார்.பெட்டி திறக்கப்படாததால்,வேறு பெட்டியில் ஏறி வந்த பழனிவேல், திருவாரூர் வந்த உடன், நாங்கள் ரயில்வே போலீஸ், கதவை திறக்கமாட்டாயா என கேட்டு, மாற்று திறனாளியான கருணாநிதியை தாக்கினார்.இதை பார்த்தவர்கள் அதிச்ச்சி அடைந்தனர். மாற்று திறனாளிகளும் கொந்தளித்தனர். இது குறித்து,சென்னை ரயில்வே போலீசில் கருணாநிதி புகார் செய்தார்.சமூக வலைதளங்களில், இது பரவியதை அடுத்து, நேற்று இரவு, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற கரத் கருண் உத்தவ்ராவ்,தலைமை காவலர் பழனிவேலுவை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.