உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / ரூ.15,000 லஞ்சம் ஆர்.ஐ., கைது

ரூ.15,000 லஞ்சம் ஆர்.ஐ., கைது

திருவாரூர்: பட்டாவில் பிழை திருத்தி கொடுப்பதற்கு, 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.திருவாரூர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகணேஷ், 45. இவர், தனக்கு சொந்தமான இடத்தின் பட்டாவில் உள்ள பிழையை திருத்த, தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தார். பிழையை திருத்த, 15,000 ரூபாய் லஞ்சம் தரும்படி, வருவாய் முதுநிலை ஆய்வாளர் ஜான் டைசன், 29, கேட்டுள்ளார். இதுகுறித்து, செல்வகணேஷ் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனை படி, செல்வகணேஷ், ரசாயன பவுடர் தடவிய பணத்தை, நேற்று ஜான் டைசனிடம் கொடுத்தார். போலீசார், ஜான் டைசனை கையும், களவுமாக கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை