உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / கட்டிட பொறியாளர் சங்கக் கருத்தரங்கம்

கட்டிட பொறியாளர் சங்கக் கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் தொழில் நுட்பங்களை மேம்படுத்தி கொள்வதுக்கான கருத்தரங்கம் திருத்துறைப்பூண்டி சங்க தலைவர் கைலாசநாதன் தலைமையில் மண்டல செயலாளர்கள் செந்தில்குமார், பாண்டியன், பாபு ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மண்டல தலைவர் பேசினார். கும்பகோணம் கட்டிட தொழில் நுட்ப வல்லுனர்கள் சங்க பொறுப்பாளர் காளிதாஸ், என்.எல்.சி., தொழில் சாலை, மார்க்கெட்டிங் முதுநிலை மேலாளர் சேகர், ஆகியோர் கட்டிடம் கட்டவதில் உள்ள தொழில்நுட்பங்களை எடுத்து விளக்கினர். இதில் பொறியாளர்கள் செல்வகணபதி, செல்வன், செல்வகுமார் ஷாஜஹான் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை தமிழக அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும். உள்ளுர் குழும திட்டத்தின் பொறியாளர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கட்டிடம் கட்ட ஒப்புதல் வழங்கும் விதிமுறைகள் சிலவற்றை இன்றைய வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.செயலாளர் மாதவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ