உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஓசி சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு வெட்டு

ஓசி சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு வெட்டு

துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே செங்கோட்டை கிராமத்தில் மாரிச்சாமி, 55, பெட்டி கடை நடத்தி வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், 52, நேற்று முன்தினம், மது போதையில் கடைக்கு சென்று கடனுக்கு சிகரெட் கேட்டுள்ளார்.'பணம் கொடுத்தால் தான் சிகரெட் தருவேன்' என கூறியதால், வீட்டிற்கு சென்ற ஜெய்சங்கர் அரிவாளை எடுத்து வந்து, மாரிச்சாமியை வெட்டி தப்பியோடினார். காயமடைந்த மாரிச்சாமியை அங்கிருந்தவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாசார்பட்டி போலீசார், காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த ஜெய்சங்கரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை