உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஸ்ரீவை., தடுப்பணை ஷட்டரில் ஓட்டை: தண்ணீர் விரயம்

ஸ்ரீவை., தடுப்பணை ஷட்டரில் ஓட்டை: தண்ணீர் விரயம்

துாத்துக்குடி : திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றில் 9 தடுப்பணைகள் உள்ளன. இதன் வாயிலாக 80,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அணை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 150 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக உள்ள இந்த அணைக்கட்டு வாயிலாக வடகால் மற்றும் தென்கால் விவசாயத்திற்கு பாசன வசதி வழங்கப்படுகிறது.இதற்கிடையே, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் ஷட்டர்கள் அனைத்தும் பழுது நீக்கம் செய்யப்பட்டன. இருப்பினும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள ஒரு ஷட்டரில் தற்போது பழுது ஏற்பட்டுள்ளது. இரண்டு ஷட்டர்களில் 7 இடங்களில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் வினாடிக்கு பல ஆயிரம் கன அடி நீர் வீணாக கடலுக்கு செல்கிறது.'இந்த அணைக்கட்டை சீரமைக்க வேண்டும்' என பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ethiraj
ஆக 29, 2024 11:36

Repairing 150 years old shutters will be more expensive than replacing them with new ones by reputed company will be economical


veeramani
ஆக 29, 2024 08:51

அணைக்கட்டுகளில் ஷட்டர் களை பழுது செய்வது அரசின் கடமை


V RAMASWAMY
ஆக 29, 2024 08:41

சீரமைத்த ஷட்டர்களில் எப்படி ஓட்டைகள் விழும்? சீரமைத்தவரகளை தீர விசாரித்து அவர்களையும் சீரமைக்கவேண்டும். இதெல்லாம் திராவிட மாடலில் சகஜமைய்யா .


சமூக நல விரும்பி
ஆக 29, 2024 05:42

திமுக அரசு ஆட்டம் கண்டு விட்டது.


Kasimani Baskaran
ஆக 29, 2024 05:30

பராமரிப்பு சரியில்லை என்றால் முதலுக்கே ஆபத்து.


புதிய வீடியோ