உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இரட்டை கொலையில் 14 இளைஞர்கள் சிக்கினர்

இரட்டை கொலையில் 14 இளைஞர்கள் சிக்கினர்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த பிரகதீஸ்வரன், 25, ஜூன் 1ம் தேதி டாஸ்மாக் கடை முன் நின்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அடுத்த அரைமணி நேரத்தில் செண்பகா நகரைச் சேர்ந்த கஸ்துாரி, 55, என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. தடுக்க முயன்ற அவரது சகோதரர் செண்பகராஜிக்கும் வெட்டு விழுந்தது.முன்விரோதம் காரணமாக இரட்டைக்கொலை நடந்ததாக மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட பிரகதீஸ்வரனுக்கும், செண்பகா நகரை சேர்ந்த கஸ்துாரி மகன் சதீஷ் மாதவனுக்கும் மோதலில் கொலை நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இரட்டைக்கொலை தொடர்பாக, கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரகதீஸ்வரன் கொலை வழக்கில், சிறுவன் உட்பட எட்டு பேரையும், கஸ்துாரி கொலை வழக்கில், ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை