உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / 16,200 டன் கொட்டைப்பாக்கு பறிமுதல்

16,200 டன் கொட்டைப்பாக்கு பறிமுதல்

துாத்துக்குடி: வெளிநாடுகளில் இருந்து கொட்டைப்பாக்குகள் இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில், மலேஷியாவில் இருந்து கொட்டைப்பாக்குகள் துாத்துக்குடி துறைமுகத்திற்கு கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.கலர் ரூப் ஷீட்கள் இறக்குமதி செய்த நிறுவனத்தின் கன்டெய்னர் பெட்டிகளை சோதனை செய்து பார்த்தபோது, அதில், 16,200 டன் கொட்டை பாக்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு, 1.25 கோடி ரூபாய். துாத்துக்குடியை சேர்ந்த ஷிப்பிங் நிறுவன உரிமையாளர்கள் வில்லியம் பிரேம்குமார், 48, அய்யனார், 50, ஆகியோரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை