உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி /  த.வெ.க., நிர்வாகி வீட்டில் 4,000 தட்டுகள் பறிமுதல்

 த.வெ.க., நிர்வாகி வீட்டில் 4,000 தட்டுகள் பறிமுதல்

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் த.வெ.க., நிர்வாகி ஒருவர் வீட்டில் சில நாட்களுக்கு முன், 5,000 எவர் சில்வர் தட்டு களை தேர்தல் பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், ஆறுமுகனேரி பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும்படை குழுவினருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அப்பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், திடீரென சோதனை நடத்தினர். அப்போது, த.வெ.க., மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன் இசக்கி என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 4,000 எவர் சில்வர் தட்டுகள், 16 குக்கர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பொருட்களை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொன் இசக்கி மீது, போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ