உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ரூ.60 லட்சம் முறைகேடு துாத்துக்குடியில் தணிக்கை

ரூ.60 லட்சம் முறைகேடு துாத்துக்குடியில் தணிக்கை

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக மூன்றாவது தளத்தில் உள்ள கனிமவளத் துறை அலுவலகத்தில், மாவட்ட மினரல் பவுண்டேசன் டிரஸ்ட் என்ற பிரிவு செயல்படுகிறது. இங்கு, ஒப்பந்த அடிப்படையில் 15 ஆண்டுகளாக கணக்கு அதிகாரியாக பணியாற்றி வந்த மறவன்மடம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி, 43, என்பவர் ஜூலை 27 ம் தேதி முதல் திடீரென மாயமானார்.அவர் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை முறைகேடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.இ - செலான் மூலம் குவாரி உரிமையாளர்கள் செலுத்திய தொகையை தமிழ்செல்வி அரசு கணக்கில் வரவு வைக்காமல் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. தலைமறைவான தமிழ்செல்வி ஒப்பந்த ஊழியர் என்பதால் கனிமவளத்துறை உயர் அதிகாரிகளும் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தனர். இந்நிலையில், முறைகேடு தொடர்பாக கனிமவளத்துறை இணை இயக்குனர் சட்டநாதன் தலைமையில், உதவி இயக்குனர் சுரேஷ் உள்பட அதிகாரிகள் குழுவினர் இரண்டு நாட்கள் திடீர் ஆய்வு நடத்தினர்.இதுகுறித்து அதிகாரிகள் சிலர் கூறியதாவது:கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அதிகாரிகள் குழுவினர் தணிக்கை செய்தனர். தணிக்கை அறிக்கையை சென்னையில் உள்ள கனிமவளத்துறை இயக்குனரிடம் அவர்கள் சமர்பிக்க உள்ளனர். அதன் பிறகே முழு விபரம் தெரியவரும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி