உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பா.ஜ., இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறும் : எல்.முருகன் பேட்டி

பா.ஜ., இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறும் : எல்.முருகன் பேட்டி

தூத்துக்குடி: தமிழகத்தில் பா.ஜ., யாரும் எதிர்பாராத வகையில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.தூத்துக்குடி விமான நிலையத்தில் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பார். தமிழகத்தில் பா.ஜ. யாரும் எதிர்பாராத வகையில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறும். பிரதமர் மோடிக்கு ஆதரவு அலை வீசுகிறது. மேட்டுப்பாளையத்தில் காங்கிரஸ் கவுன்சிலரால் தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் இருக்கிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b2enbtpi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த கவுன்சிலர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதற்கு மாறாக அந்த இளைஞர் மற்றும் அவரது தாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. போலீஸ் மற்றும் நடத்துனர் இடையே கட்டப்பஞ்சாயத்து செய்யப்படுகிறதா?.

இமயமலை

அரசு நிர்வாகம் இல்லையா? இது மிகவும் கேவலமானது. கடந்த தேர்தலின் போது பாரத பிரதமர் இமயமலை சென்று தியானம் செய்தார். தற்போது தமிழகத்தில் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் செய்து கொண்டிருக்கிறார்.

மூன்றாவது இடம்

2014ல் நாம் பொருளாதாரத்தில் பத்தாவது இடத்தில் இருந்தோம். இப்பொழுது 10 ஆண்டுகளில் பொருளாதாரம் அதிக அளவு முன்னேறியுள்ளது. இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது. தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளோம். 2027ம் ஆண்டுக்குள் மூன்றாவது இடத்தை அடைவோம் என பிரதமர் மோடி மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Arul
ஜூன் 01, 2024 18:29

இரட்டை இலக்கம் சரிதான். 00!


MADHAVAN
ஜூன் 01, 2024 17:31

பாவம் பிஜேபி இந்தியாமுழுசும் 75 இடங்கள் வாங்கி பிஜேபி முக்காடு போடப்போகுதாம்


J.V. Iyer
ஜூன் 01, 2024 17:30

கட்சியில் உள்குத்து என்று பேச்சு. சரியான முகங்களை தெரிவுசெய்யவில்லை என்ற கருத்து. தொகுதிகளை மாற்றி மாற்றி வேட்பாளர்களை நியமித்தது. பல லட்சம் பாஜக ஆதரவாளர்களை வோட்டு போட விடவில்லை. இதை இல்லாம தேர்தலுக்கு முன்பே செய்திருக்கவேண்டும். என்ன செய்வது.. விதி யாரை விட்டது? வந்தவரை லாபம்தான். அடுத்த தேர்தலிலாவது இதையெல்லாம் நிவர்த்தி செய்வீர்களா? பாஜகவுக்கு இன்னும் அனுபவம் வேண்டும்.


Tamil Inban
ஜூன் 01, 2024 11:56

வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது...


Anantharaman Srinivasan
ஜூன் 01, 2024 11:50

தமிழகத்தில் பா.ஜ. இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றியா...? பகற்கனவில் கூட சாத்தியமில்லை ஒருவேளை ஓட்டிங் மிஷின் கை கொடுப்பபதாக வாக்குறுதி கொடுத்துள்ளதோ..?


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 02, 2024 05:17

அறிவாளி அப்படித்தானே திருட்டு தி மு க ஜெயித்தது?


Jai
ஜூன் 01, 2024 11:36

பிஜேபி 280 வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறதி. சென்ற தேர்தலில் 220 இடங்களில் 50 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டு வாங்கி வெற்றி பெற்றனர். இந்தத் தொகுதிகளில் மாற்றம் வரப்போவதில்லை. தமிழ்நாட்டில் 2 அல்லது 3 சீட்களை பெற்று 15% வாக்கு பெற்றாலே பிஜேபிக்கு மாபெரும் வெற்றி.


MADHAVAN
ஜூன் 01, 2024 10:38

இதுவரை முருகன் பேசியதில் இந்திய முழுவதும் சேர்த்து 75 இடங்கள் இது ஒன்றுதான் உண்மை,


sankar
ஜூன் 01, 2024 12:26

எழுதி வைத்துக்கொள்ளுங்க - பிஜேபி நானூற்று ஐம்பது இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் - சாதனை படைக்கும் - தமிழகத்தின் பங்கும் அதில் இருக்கும்


ஆரூர் ரங்
ஜூன் 01, 2024 10:28

அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு. இதையெல்லாம் விட்டுவிட்டு திருட்டு திராவிஷ ஆட்சி பாடப்புத்தகங்களில் திணித்துள்ள பொய் வரலாறுகள்( யுனாஸ்கோ பட்டம் போன்ற) போலி பிம்பங்களை கோர்ட்டுக்குச் சென்றாவது அகற்ற வையுங்கள். பிஞ்சு மனங்களில் பிரிவினை எண்ணங்கள் திணிக்கப்படும் கொடுமைக்கு முடிவு கட்டுங்கள். இல்லையெனில் எதிர்கால தமிழக சந்ததி உங்களை நம்பவே நம்பாது. தவறானவர்கள் பேச்சைக் கேட்டு அழியும்.


Sampath Kumar
ஜூன் 01, 2024 10:26

மிக சரியாக சொன்னேர் நோட்டாவுக்கு போட்டியாக இரட்டை இலக்கை வாங்கிடுவாங்க போல


அப்புசாமி
ஜூன் 01, 2024 10:20

தியான பலன் கிடைக்காமல்.போகாது...


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி