உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கிறிஸ்தவ மத போதகர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு

கிறிஸ்தவ மத போதகர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு

துாத்துக்குடி : ஓய்வு பெற்ற நீதிபதி காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட, கிறிஸ்தவ மத போதகர்கள், நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தென்னிந்திய திருச்சபையின் கீழ் செயல்படும் துாத்துக்குடி- நாசரேத் திருமண்டில நிர்வாகத்தை, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி கவனித்து வருகிறார். மே, 8ல் துாத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள டயோசீசன் அலுவலக வளாகத்தில், ஜோதிமணியின் காரை வழிமறித்து, மத போதகர்கள் சிலர் தகராறு செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8am7np7b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில், ஜோதிமணியின் உதவியாளர் கருணாகரன் என்பவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக, அவர் துாத்துக்குடி ஏ.எஸ்.பி., அலுவலகத்திலும், வடபாகம் காவல் நிலையத்திலும், மத போதகர்கள் டேவிட்ராஜ், லிவிங்ஸ்டன், ஹாரிஸ், ராபின் மற்றும் சிலர் மீது புகார் அளித்தார்.விசாரணை நடத்திய போலீசார், மத போதகர்கள் நான்கு பேர் மீதும், நிர்வாகியை தடுத்து நிறுத்துதல், ஆபாச வார்த்தைகளால் பேசி மோசமான செயல்களில் ஈடுபடுதல், தாகுதல் நடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய, 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.மத போதகர்கள் டேவிட்ராஜ், லிவிங்ஸ்டன், ஹாரிஸ், ராபின் ஆகியோர் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி, ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் ஆவர்.அவர்கள் கவனித்து வந்த சர்ச் பணிகளை, உதவி மத போதகர்கள் கவனித்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த மத போதகர்கள் நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Rathna
மே 12, 2025 18:49

திருடர்களுக்குள்ளே கொள்ளை அடித்த பணத்தை பிரிப்பதில் சண்டை. ஏதோ நீதி கதை படித்தது போல் இருக்கிறது. எத்தனை முறைதான் அந்த அப்பாவியை சிலுவையில் ஏற்றுவீர்கள்? குருடன் பார்க்கிறான், செவிடன் கேட்கிறான், ஊமை பேசுகிறான் என்று சொல்லி அப்பாவி மக்களை எவ்வளவு நாள் தான் ஏமாற்றுவது


S. Neelakanta Pillai
மே 12, 2025 18:43

ஏன் கைது செய்யவில்லை?


Anand
மே 12, 2025 13:29

என்னது, வழக்கா?


Kundalakesi
மே 12, 2025 13:22

கிறித்துவர்கள் புகுந்த இடம் ஆமை புகுந்த இடம் போல தான்


Narayanan
மே 12, 2025 13:21

மத போதகர்கள் ஆனபின்னால் எப்படி தகாத வார்த்தைகள் வரும்? அவர்கள் அமைதிக்கு பாடுபடுபவர்களாக சொல்கிறார்கள் .அவர்கள் பக்குவப்படவில்லை என்று இந்த நிகழ்வின் வாயிலாக தெரிகிறது .


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 12, 2025 11:34

மதபோதகர்கள் யாருக்கு ஓட்டுப்போடணும் ன்னு சொன்னா அப்படியே போடுற கூட்டம் இருக்குது .....


தமிழ்வேள்
மே 12, 2025 11:13

போதித்து கேட்டு மதம் மாறியவன் எந்த லட்சணத்தில் இருப்பான்? அந்த மதம் எப்படிப்பட்ட முரட்டு மதமாக இருக்கும் ?


சாமானியன்
மே 12, 2025 10:55

மதத்திற்கு ஆள் பிடிக்கும் போது பைபிள் தனதுகௌரவத்தை இழக்கிறது. அரசியல் கட்சி போல கொள்கை பிடிப்பின்றி நீர்த்து போகின்றது. வேலை வெட்டி இல்லாதவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகின்றது.


Shekar
மே 12, 2025 10:47

பங்காளிகளுக்குள் பங்கு போடுவதில் பிரச்சனை


c.k.sundar rao
மே 12, 2025 10:40

They don't look like priest