உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ரூ.7 கோடி சீன பொம்மை பறிமுதல்

ரூ.7 கோடி சீன பொம்மை பறிமுதல்

துாத்துக்குடி: சீனாவில் இருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு கடத்தி வரப்பட்ட தரம் குறைந்த, 7 கோடி ரூபாய் மதிப்பிலான பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சீனாவில் உள்ள நிங்போ துறைமுகத்தில் இருந்து துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்கு வந்த ஒரு கப்பலில் பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு நான்கு கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. கன்டெய்னர் பெட்டிக்குள் இருக்கும்பொருட்களுக்கான ஆவணங்களில் ஹெல்மெட்கள், விளையாட்டு உபகரணமான க்னீபேட் மற்றும் டூத் பிரஷ் உள்ளிட்ட பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.சந்தேகம் அடைந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், கன்டெய்னர்களை சோதனையிட்டனர். அதில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட விளையாட்டு பொம்மைகள் மற்றும் ஷூக்கள் கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தியாவிற்குள் பயன்படுத்தும் வகையிலான தரம் அந்த பொருட்களில் இல்லாததால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு, 7 கோடி ரூபாய் வரை இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட நபர்கள் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ