உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஓட்டளிக்க முடியாதவர்களுக்கும் திராவிட மாடல் ஆட்சி துணை நிற்கும்: கனிமொழி

ஓட்டளிக்க முடியாதவர்களுக்கும் திராவிட மாடல் ஆட்சி துணை நிற்கும்: கனிமொழி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி : தமிழக அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், துாத்துக்குடி சிலுவைப்பட்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், 3.70 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 56 குடியிருப்புகளை கனிமொழி எம்.பி., நேற்று திறந்து வைத்தார்.பின் அவர் பேசியதாவது: புலம்பெயர்ந்த மக்களின் மனதை புண்படுத்தக்கூடிய வகையில், அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமின் பெயர் இருக்கக்கூடாது என்பதற்காக மறுவாழ்வு முகாம்கள் என பெயரை மாற்றியவர் முதல்வர் ஸ்டாலின்.முகாம்களில் உள்ள புலம்பெயர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரக்கூடிய ஆட்சியாக தி.மு.க., ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எப்போதுமே, புலம்பெயர்ந்த மக்களுக்கு உறுதுணையாக தி.மு.க., ஆட்சி செயல்படும். முகாம்களில் வாழக்கூடிய மக்களுக்கு, இருக்கக்கூடிய 'மென்டல் ஹெல்த்' பிரச்னைகளை உணர்ந்து ஒரு பாலிசி திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுத்துள்ளனர். இந்த மண்ணில், எல்லாரையும் போல புலம்பெயர்ந்த மக்களும் வாழ உரிமை பெற்றவர்கள் என்ற மனநிலையை உருவாக்கித் தந்துள்ளோம்.ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஓட்டளித்த மற்றும் ஓட்டளிக்காத மக்களுக்குக்கான ஆட்சியாகவும் இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதையும் தாண்டி, ஓட்டளிக்க முடியாதவர்களுக்கும் திராவிட மாடல் ஆட்சி துணை நிற்கும் என்று நிலைநாட்டி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Lion Drsekar
அக் 05, 2024 17:00

வாழ்த்துக்கள், இங்கேயே பிறந்து , வளர்ந்து பரம்பரையாக வாழும் ஒரு இனம் அதிகாரப்போர்வமாக , சட்டப்போர்வமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில் குரல் கொடுக்க இறைவனே இல்லாத இந்த காலத்தில், புலம் பெயர்ந்தவர்களுக்காக குரல்கொடுக்க ஒருவர் இருக்கிறார் என்று பார்க்கும்போது பாராட்டாமல் இருக்க முடியாது . அழித்துக்கொண்டு இருப்பவர்கள் அழியும் நேரத்திலும் அவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தை " லோக சமஸ்தா சுஃஹினோ பவந்து " வந்தே மாதரம்


pandit
அக் 05, 2024 14:44

விதவைகள் வுறுவாக்கும் குழு தலைவி எப்படி அதை பற்றி பேசமுடியும்


Matt P
அக் 05, 2024 12:38

ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஓட்டளித்த மற்றும் ஓட்டளிக்காத மக்களுக்குக்கான ஆட்சியாகவும் இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார். ....ஓட்டளிக்காத மக்களுக்கும் என்று பேசியதே தவறு. ..பெரும்பான்மை மக்கள் வாக்களித்து பெரும்பான்மை பெற்றாலும் எல்லோருக்கும் தஆன் அவர் முதல் மந்திரி என்ற்று அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். சொல்வதை பார்த்தல் திமுககாரநுகளுக்கு மட்டும் தான் உதவுவோம். அது என்க அப்பா காலத்திலிருந்தே இருக்கிறது. அதை என்க அண்ணன் மாற்றி விட்டார் என்று சொல்வது மாதிரி இருக்கிறது.


xyzabc
அக் 05, 2024 10:17

வோட் போட முடியாதவர்களும் உங்களுக்கு லாபமே. அதை எப்படி வோட்களாக மாற்றுவது என்பது தி மு க வினருக்கு கை வந்த கலை . இதில் dialog வேறு ?


Kasimani Baskaran
அக் 05, 2024 08:37

காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைத்தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்ற பொழுது நாடகம் போட்டுக்கொண்டு இருந்தவர்கள் பேசுகிற பேச்சு சகிக்கவில்லை. போயும் போயும் தமிழன் திராவிடர்களை ஆளவிட்டு வேடிக்கை பார்ப்பது தமிழினத்துக்கே அவமானம்.


GMM
அக் 05, 2024 08:18

பாக்கிஸ்தான், வங்கதேச , ஸ்ரீ லங்கா புலம் பெயர்ந்த மக்களை தமிழக மாநில நிர்வாகம் அடையாள படுத்த முடியாது. ஸ்ரீ லங்கா குடிமக்களுக்கு மறுவாழ்வு வேலை தர அந்த நாட்டின் அனுமதி தேவைப்படும்?. உள்நாட்டு மக்கள் எதிர்ப்பு இருக்க கூடாது. திமுக செயல்பாடுகள் தெளிவாக இல்லை. மாநிலங்களை நான்கு மாகாணமாக்க வேண்டும். சட்ட ஒழுங்கு , தேச பாதுகாப்பிற்கு சில மாநிலங்கள் ஒத்துழைப்பது இல்லை?


sridhar
அக் 05, 2024 08:13

அவ்வப்போது ஏதாவது உளறுவதே இவருக்கு வாடிக்கை . 2021 தேர்தலுக்கு முன்பு மது ஒழிப்பு குறித்து வீரமாக பேசியதை இன்னமும் கலாய்க்கிறார்கள் மக்கள். மனம் பூரா விஷம், வாக்கில் மட்டும் தேன் .


VENKATASUBRAMANIAN
அக் 05, 2024 07:51

எதற்கு கள்ள ஓட்டு ளபோடுவதிற்கா. ஏம்மா குடிப்பழக்கத்தினால் தமிழகத்தில் விதவைகள் அதிகம் என்று கூறி மூன்று வருடம் முன்பு போராடீனீர்கள். ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது எத்தனை விதவைகள் உள்ளனர். இப் வாயை மூடிக்கொண்டு இருக்கிறீர்கள்.இதுதான் திராவிட மாடல் போலும். எத்தனை காலம்தான் மக்களை ஏமாற்றி வருவீர்கள். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்


Ramesh
அக் 05, 2024 07:49

திராவிட மாடல் என்பது தமிழர்களை தெலுங்கர்கள் ஆள்வது என்பதாகும். அது தெரியாமலே தமிழர்கள் ஙே... என்று மீண்டும் மீண்டும் திமுகவிற்கு ஓட்டு போட்டு நாசமா போவது என்பதுவும் ஆகும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 05, 2024 10:05

நீங்க தமிழர்கள் என்பதை மறந்து திராவிட மாடலின் குடையின் கீழ் வாங்க ..... எங்களை ஆந்திர, கன்னட வரவுகள், வந்தேறிகள் ன்னு ஒரு பிரிவினர் சொல்லிக்கிட்டு இருக்கு ..... அதை நம்பாதீங்க ..... எங்களை ஆதரியுங்க .....


Barakat Ali
அக் 05, 2024 07:19

\\ முகாம்களில் வாழக்கூடிய மக்களுக்கு, இருக்கக்கூடிய மென்டல் ஹெல்த் பிரச்னைகளை //// உங்க பேச்சு, கழக பேச்சாளர்களின் பேச்சு இதெல்லாம் கேட்டா மென்டல் ஹெல்த் பிரச்னை எப்படி ஒரு கட்சியையே பாதிச்சுது ன்னு டவுட்டா கீது மேடம் ஜி ......


சமீபத்திய செய்தி