உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கண்ணீரை வரவழைக்கும் காய்ந்த மிளகாய்

கண்ணீரை வரவழைக்கும் காய்ந்த மிளகாய்

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த எதிர்பாராத மழை காரணமாக, காய்ந்த மிளகாயின் பெரும்பகுதி பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது சாதாரண மிளகாய் வத்தல், 100 கிலோ மூட்டையை, 9,000 ரூபாய்க்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர், கடந்த ஆண்டு, 17,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. அதேபோல, கடந்த ஆண்டு, 100 கிலோ, 25,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட குண்டு மிளகாய் வத்தல் தற்போது, 8,000 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி