உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி /  மின் கம்பத்தில் பஸ் மோதி டிரைவர் பலி

 மின் கம்பத்தில் பஸ் மோதி டிரைவர் பலி

துாத்துக்குடி: மின் கம்பத்தில், பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், டிரைவர் உயிரிழந்தார். துாத்துக்குடி மாவட்டம், குரும்பூரில் இருந்து பயணியரை ஏற்றிக் கொண்டு, தனியார் பஸ் ஒன்று நேற்று காலை துாத்துக்குடி நோக்கி சென்றது. வாழவல்லானை சேர்ந்த மணிமுத்து, 55, என்பவர் பஸ்சை ஓட்டினார். மறவன்மடம் அருகே சென்றபோது, அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென சாலையோர பள்ளத்தில் இறங்கி, அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியது. பஸ், 100 மீ துாரம் வரை மின்கம்பத்தை இழுத்து சென்று நின்றது. இதில், டிரைவர் மணிமுத்து உயிரிழந்தார். பயணியர், ஒன்பது பேருக்கு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, அரச மருத்துவமனையில் அனுமதித்தனர். புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். மின்கம்பத்தை பஸ் இழுத்துச் சென்றதால் மறவன்மடம், அந்தோனியார்புரம் பகுதிகளுக்கு மின்விநியோகம், தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை