உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி /  விசில் சின்னத்துடன் எவர்சில்வர் தட்டுகள் பறிமுதல்

 விசில் சின்னத்துடன் எவர்சில்வர் தட்டுகள் பறிமுதல்

திருச்செந்துார்: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் தொகுதிக்குட்பட்ட உடன்குடியில், பறக்கும் படை அதிகாரி இசக்கிபாண்டியன் தலை மையிலான குழுவினர், நேற்று காலை சோதனை நடத்தினர். கோட்டவிளை புதுமனை கிராமத்தில் தமிழ்செல்வன் என்பவரது வீட்டில், 5 மூட்டைகளில் விசில் சின்னம் பொறிக்கப்பட்ட 5,000 எவர் சில்வர் தட்டு கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருச்செந்துார் தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிட திட்டமிட்டு வரும் தொழிலதிபர் ஒருவர், தட்டுகளை வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை