உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / காவலாளி அடித்து கொலை

காவலாளி அடித்து கொலை

துாத்துக்குடி:புதிய பாலம் கட்டும் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். துாத்துக்குடி அருகே தருவைகுளம்-, வெள்ளப்பட்டி கடற்கரை சாலையில் புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு காவலாளியாக முத்தையாபுரம் பொட்டல்காடு பகுதியை சேர்ந்த சந்திரன், 61, வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சந்திரன், தலையில் கம்பால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். தருவைகுளம் போலீசார் விசாரித்தனர். அதில், சந்திரன் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் மது குடித்துள்ளார். அப்போது, ஏற்பட்ட தகராறில், கொலை செய்யப் பட்டுள்ளார். கொலையாளிகளை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை