மேலும் செய்திகள்
தகராறு: ஒருவர் கைது
07-May-2025
துாத்துக்குடி : துாத்துக்குடி, முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் டாக்டர் கண்ணன், 46; துாத்துக்குடி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், பொது மருத்துவம் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை பணிக்கு வந்த கண்ணன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.அப்போது, அவர் குடிபோதையில் இருந்ததால், நோயாளிகள் சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் கண்ணன் தகராறு செய்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நோயாளிகள், கண்ணனிடம் சிகிச்சை பெற தயங்கி, உடன் இருந்த டாக்டர்களிடம் புகார் அளித்தனர்.இதையடுத்து, டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை பாதுகாவலர்கள், கண்ணனை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றினர். குடும்ப சூழல் காரணமாக தனியே வசிக்கும் கண்ணன் குடிபோதைக்கு அடிமையாகிவிட்டதாக கூறப்படுகிறது. பலமுறை இதுபோல பிரச்னை ஏற்பட்ட போதிலும், அவர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம், கலெக்டர் உரிய விசாரணை நடத்தி, கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
07-May-2025