உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கோவில் வளாகத்தில் பூசாரி கொலை

கோவில் வளாகத்தில் பூசாரி கொலை

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஆ றுமுகனேரி, பெருமாள்புரத்தை சேர்ந்த பாரத ஹிந்து மகா சபா ஒன்றிய நிர்வாகி முருகேசன், 54. இவருக்கு, முத்துலட்சுமி என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். இவர் அப்பகுதியில் உள்ள சுடலைமாட சுவாமி கோவில் பூசாரியாகவும் இருந்தார். நேற்று, கோவிலுக்கு சென்ற முருகேசன் அங்குள்ள மரத்தின் கீழே சிறிது நேரம் ஓய்வு எடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல், முருகேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பியது. ஆறுமுகனேரி போலீசார் விசாரித்தனர். இதில், இசக்கிமுத்து, 25, சுகுமார், 31, மாரிசெல்வம், 26, சங்கர், 43, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கடந்த ஆண்டு கோவில் கொடை விழாவின்போது முருகேசன், மாற்று சமூகத்தை சேர்ந்த இசக்கி முத்துவை அடித்துள்ளார். இந்த முன்விரோதத்தில், முருகேசன் தரப்பினர், அவரை கொலை செய்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை