மேலும் செய்திகள்
பிரான்மலையில் மீண்டும் புறக்காவல் நிலையம்
11-Sep-2025
துாத்துக்குடி:புறக்காவல் நிலையத்தை சூறையாடிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். துாத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே பாறை காடு கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிதுரை, 28. இவர் மீது இரு கொலை வழக்குகள் உட்பட 14 வழக்குகள் உள்ளன. மே 4ல் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர், இம்மாதம் 7ம் தேதி வெளியே வந்தார். நேற்று குடிபோதையில் இருந்த இசக்கிதுரை, கையில் அரிவாளுடன் சுற்றி திரிந்துள்ளார். திருநெல்வேலி -- துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வல்ல நாடு சந்திப்பு பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு, இவர் தன் நண்பர் ஒருவருடன் சென்றார். அங்கு போலீசார் யாரும் இல்லை. இசக்கிதுரை, அங்கிருந்த பொருட்களையும், 'சிசிடிவி' கேமரா மானிட்டரையும் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி சூறையாடியுள்ளார். அருகில் இருந்த மக்கள் கூச்சலிட்டதும், பைக்கில் இருவரும் திருநெல்வேலி நோக்கி தப்பினர். முறப்பநாடு போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர். தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த போலீசார் மீது இருந்த ஆத்திரத்தில், அவர், புறகாவல் நிலையத்தை சூறையாடி இருக்கலாம் என கூறப்படுகிறது.
11-Sep-2025