மேலும் செய்திகள்
8 கிலோ கஞ்சா பறிமுதல் சென்னை வாலிபர் கைது
05-Feb-2026
துாத்துக்குடி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, பிளஸ் 2 மாணவரை, போலீசார் கைது செய்தனர். துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு எஸ்.ஐ., சந்தனமாரி தலைமையிலான போலீசார், பசுவந்தனை சாலையில், நேற்று முன்தினம், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள கோவில் அருகே, சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த இளம்சிறார் ஒருவரிடம் சோதனை செய்தபோது, 100 கிராம் கஞ்சாவை, விற்பனைக்காக அவர் வைத்திருந்தது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். விசாரணையில், அங்குள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருவது தெரிந்தது. திருநெல்வேலியிலில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில், போலீசார் அவரை ஒப்படைத்தனர்.
05-Feb-2026