உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி /  போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது

 போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது

துாத்துக்குடி: மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், விளாத்திகுளத்தை சேர்ந்த தியாகராஜன், 38, இயற்பியல் ஆசிரியராக உள்ளார். இவர், மாணவியர் ஆறு பேரை களப்பயிற்சிக்காக சென்னமரெட்டி பட்டி கிராமத்திற்கு அழைத்து சென்றபோது, அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மாணவியர், தலைமையாசிரியையிடம் புகார் கூறினர். அவர் அலட்சியமாக செயல்பட்ட நிலையில், விளாத்திகுளம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். தியாகராஜன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாரை அலட்சியப்படுத்திய தலைமை ஆசிரியர் அன்னை ஷீபா பிளவர் லைட் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தியாகராஜனை தனிப்படை போலீசார் நேற்று மதுரையில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை