லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
துாத்துக்குடி: லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். துாத்துக்குடி மாவட்டம், கீழஈராலை சேர்ந்தவர் ஜோதிமுத்து, 43. லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு, ஒரு டிப்பர் லாரியில் துறைமுகத்தில் பொருட்களை இறக்கிவிட்டு, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரியை கவனிக்காததால், அந்த லாரியின் பின்பக்கத்தில் ஜோதிமுத்து ஓட்டி சென்ற லாரி மோதியது. இதில் ஜோதிமுத்து உயிரிழந்தார். சிப்காட் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். விபத்திற்கு காரணமான, லாரி டிரை வரை, போலீசார் தேடுகின்றனர்.