மேலும் செய்திகள்
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
21-Aug-2025
துாத்துக்குடி:'ஒரு மாதம் சம்பளம் வழங்காவிட்டால் பொறுத்துக் கொள்வீர்களா?' என, அதிகாரிகளிடம் கலெக்டர் எழுப்பிய கேள்வியால் பரபரப்பு ஏற்பட்டது. துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் இளம்பகவத் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. வில்லிசேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரேம்குமார் பேசுகையில், 'விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட உளுந்துக்கு நான்கு மாதங்கள் ஆகியும் பணம் வழங்கவில்லை. விபரம் கேட்டாலும் அதிகாரிகள் பதில் கூறுவது இல்லை' என்றார். கலெக்டர் இளம்பகவத், 'விவசாயிகள் உற் பத்தி செய்த பயிரை அரசிடம் வழங்கி, அதற்கான பணத்தை வாங்குவது, அவர்களுக்கான சம்பளம். அவர்களுக்கு நான்கு மாதமாக பணம் வழங்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிகாரிகளுக்கு இதைவிட வேறு என்ன வேலை ? 'உங்களுக்கு ஒரு மாத ஊதியம் வழங்காவிட்டால் பொறுப்பீர்களா? வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாக சென்னை சென்று, விவசாயிகளுக்கு பணம் கிடைக்க ஏற்பாடு செய்த பின் தான் இங்கே வர வேண்டும்' என, உத்தரவிட்டார்.
21-Aug-2025