உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தனியார் பள்ளியில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட த.வெ.க., நிர்வாகி

தனியார் பள்ளியில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட த.வெ.க., நிர்வாகி

துாத்துக்குடி: த.வெ.க., ஒன்றிய செயலர் ஒருவர் தனியார் நர்சரி பள்ளியில் குழந்தைகள் முன் திரைப்பட பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அக்கட்சியினர் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறி நடந்து கொள்வதும், பள்ளிகளில் நல உதவிகள் வழங்குகிறோம் என்ற பெயரில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிடுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் த.வெ.க., ஒன்றிய செயலர் அந்தோணி பிரான்சிஸ், தனியார் பள்ளியில் குழந்தைகள் முன் திரைப்பட பாடலுக்கு நடனமாடியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தருவைகுளம் மீனவ கிராமத்தில் உள்ள சர்ச் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் நர்சரி பள்ளியில், சமீபத்தில் நடந்த குழந்தைகள் தின நிகழ்ச்சியில், த.வெ.க., ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலர் அந்தோணி பிரான்சிஸ் கலந்து கொண்டார். குழந்தைகளை மகிழ்விக்க, அவர் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடினார். பின்னர் அந்த வீடியோவை தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பள்ளிகளில் தேவையற்ற வீடியோக்கள் எடுக்கக்கூடாது என அமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், த.வெ.க., ஒன்றிய செயலரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VENKATASUBRAMANIAN
நவ 09, 2026 08:07

விஜய் இவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். மாணவர்களை கெடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். சினிமாவை கல்வியில் நுழைக்காதீர்கள்.


Mani . V
நவ 09, 2026 05:54

இந்த தறுதலை டாக்குகளுக்கு கடிவாளம் போடவில்லையென்றால் இதுதான் விஜய்யின் கடைசி முதல்வர் பதவிக்காலம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை