மேலும் செய்திகள்
கலெக்டர் உத்தரவில் டாக்டர் 'சஸ்பெண்ட்'
13-Oct-2026
துாத்துக்குடி: பேனர் வைக்கும் தகராறில், வி.சி.க., பிரமுகர் பாலமுருகன், 45, வெட்டி கொலை செய்யப்பட்டார். துாத்துக்குடி மாவட்டம், சோட்டையன்தோப்பை சேர்ந்தவர் பாலமுருகன். வி.சி.க., முன்னாள் ஒன்றிய துணை செயலர். இன்று (நவ.,1), பைக்கில் சேதுபாதை அருகே சென்று கொண்டிருந்த பாலமுருகனை, மர்ம கும்பல் ஒன்று, அரிவாளால் வெட்டியது. இதில், பாலமுருகன் உயிரிழந்தார். இதையடுத்து, பாலமுருகனின் உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். தாளமுத்துநகர் போலீசார், பேச்சு நடத்தி, விசாரித்தனர். அதில், பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில், கொலை நடந்தது தெரிந்தது. இதையடுத்து, தாளமுத்துநகர் சிவச்சந்திரன், 28, கே.வி.கே.நகர் சிவக்குமார், 22, சோட்டையன்தோப்பு மணிகண்டன், 20, தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் பொன்பாண்டி, 44, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில், 6 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
13-Oct-2026