உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு பாலக்கோடு ஹோம் கேர் பெண் நிறுவனர் கைது

நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு பாலக்கோடு ஹோம் கேர் பெண் நிறுவனர் கைது

திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே மத்திய அரசு ஆண் ஊழி-யரை, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி, 2.30 லட்சம் ரூபாய் பறித்த, தர்மபுரி மற்றும் கிருஷ்-ணகிரியை சேர்ந்த பெண்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் சூசையம்மாள், 35; வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் 'சன் லைட் ஹோம் கேர்' நிறு-வனம் நடத்தி வருகிறார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மூகண்டஹள்ளியை சேர்ந்த நளினி, 32, பணிக்கு சேர்ந்தார். திருப்பத்துார் மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 50; திருப்பத்துார் தலைமை அஞ்சல் அலுவலக கண்காணிப்-பாளர். இவரது தாய்க்கு உடல் நலக்குறைவால், சூசையம்மாளிடம் வீட்டு வேலைக்கு ஆள் கேட்டார். அவரும் நளினியை சில நாட்களுக்கு முன் அனுப்பி வைத்தார். அப்போது நளினி, மாதேஸ்வரனிடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி மாதேஸ்வரன் நிர்வாணமாக இருக்கும்போது, நளினி மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். வீடி-யோவை காட்டி மிரட்டி, ஐந்து லட்சம் ரூபாய் கேட்டு இருவரும் மிரட்டியுள்ளனர். மாதேஸ்வ-ரனும், 2.30 லட்சம் ரூபாய் வரை கொடுத்-துள்ளார். மீதி பணம் கேட்டு தொந்தரவு செய்-யவே மொபைல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்-துள்ளார். இதனால் ஆம்பூரை சேர்ந்த விமல்ராஜை, 40, மாதேஸ்வரன் வீட்டுக்கு அனுப்பி, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து திருப்பத்துார் டவுன் போலீசில், மாதேஸ்வரன் புகாரளித்தார். இதன்படி விசாரித்த போலீசார், சூசையம்மாள், நளினி, விமல்ராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ