உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி திருப்பத்துார் அருகே கிராமத்தில் சோகம்

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி திருப்பத்துார் அருகே கிராமத்தில் சோகம்

திருப்பத்துார்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி, திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். திருப்பத்துார் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 45. இவர், 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டம், ஜகல்பூரில், சிவில் இன்ஜினியராக பணியாற்றிய நிலையில், அங்கேயே குடும்பத்துடன் வசித்தார். நேற் று திருப்பதியில் நடந்த திருமணத்திற்கு செல்ல, ராஜேஷ்குமார், அவரது மனைவி பவித்ரா, 38, மகள்கள் சவுத்தியா, 8, சவுமிகா, 6, ஆகிய நான்கு பேரும், 'மாருதி டிசையர்' காரில், நேற்று முன்தின ம் சத்தீஸ்கரிலிருந்து புறப்பட்டு, திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தனர். சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், அவர்கள் கார் சிக்கியதில், காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில், நான்கு பேரும் உயிரிழந்தனர். அவர்களை உடல்களை அம்மாநில போலீசார் மீட்டுள்ளனர். நான்கு பேரின் உடல்களையும் திருப்பத்துார் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெள்ளத்தில் சிக்கி பலியான சம்பவம், திருப்பத்துாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை