உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / பெண்ணுக்கு கருக்கலைப்பு; கணவருடன் போலி டாக்டர் கைது

பெண்ணுக்கு கருக்கலைப்பு; கணவருடன் போலி டாக்டர் கைது

திருப்பத்துார் ; திருப்பத்துார் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை எக்ஸ்--ரே டெக்னீஷியன் சுதாகர், 40. இவரது மனைவி சுமங்கலி, 32, பட்டதாரி. இவர் டாக்டர் எனக்கூறி, கிளினிக் நடத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த, ஆர்த்தி, 24, என்பவருக்கு ஏற்கனவே, இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும், நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தார். கருவில் இருக்கும் பாலினத்தைக் கண்டறிய, போலி டாக்டர் சுமங்கலியை அவர் அணுகினார். அவர், ஆந்திர மாநிலம், சித்துாருக்கு அழைத்துச் சென்று, ஒரு ஸ்கேன் சென்டரில் பரிசோதித்ததில், கருவில் இருப்பது பெண் எனத் தெரிந்தது. அதனால் கருவைக் கலைக்குமாறு ஆர்த்தி அப்போது போலி டாக்டர் சுமங்கலியிடம் கூறினார்.நேற்று முன்தினம் மாலை, ஆர்த்தி, அவரது கணவர் சந்துரு ஆகியோர், சுமங்கலி நடத்தும் கிளினிக்கிற்கு சென்று கருக்கலைப்பு செய்தனர். தகவலறிந்த ஊரக மருத்துவ இணை இயக்குனர் கண்ணகி தலைமையிலான மருத்துவக் குழுவினர் அங்கு சென்று, சுமங்கலியை பிடித்து, திருப்பத்துார் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.சுமங்கலி, அவருக்கு உடந்தையாக இருந்த கணவர் சுதாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ