உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / மின்சாரம் பாய்ந்து கட்டட மேஸ்திரி பலி

மின்சாரம் பாய்ந்து கட்டட மேஸ்திரி பலி

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் பைபாஸ் சாலையில் போஸ் என்பவருக்கு சொந்தமான இடத்தில், வீடு கட்டும் பணி நடக்கிறது. நேற்று காலை, வாணியம்பாடி அடுத்த மதினாஞ்சேரியை சேர்ந்த கட்டட மேஸ்திரி சரவணன், 32, என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கட்டடத்தில் மின் ஒயரில் மின் கசிவு ஏற்பட்டு, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். ஆம்பூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ