மேலும் செய்திகள்
மதுராந்தகம் அருகே போலி டாக்டர் கைது
10-Aug-2025
வாணியம்பாடி:வாணியம்பாடி அருகே நேற்று போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சங்கராபுரத்தை சேர்ந்தவர் அனுமுத்து, 47. இவர், முறையாக மருத்துவம் படிக்காமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக வந்த புகாரில், வாணியம்பாடி ஆர்.டி.ஓ., அஜிதா பேகம் மற்றும் வருவாய் துறையினர், சங்கராபுரத்தில் நேற்று சோதனை செய்தனர். இதில், அனுமுத்து பிளஸ் 2 மட்டும் படித்து விட்டு, கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. அவரை பிடித்து அம்பலுார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அனுமுத்து வை கைது செய்தனர்.
10-Aug-2025