உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய ஐ.டி., ஊழியர் பலி

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய ஐ.டி., ஊழியர் பலி

ஜோலார்பேட்டை; திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பார்சம்பேட்டையிலுள்ள ஜெயமாதா நகரை சேர்ந்தவர் சுதாகர், 48. இவர், சென்னையிலுள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தன் குடும்பத்தினரை பார்க்க, நேற்று முன்தினம் இரவு மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊர் திரும்பினார். ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன், 1வது பிளாட்பாரத்தில் நிற்க ரயில் மெதுவாக சென்றபோது, ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற சுதாகர், கால் தவறி பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையே விழுந்தார்.இதை கண்டு சக பயணியர் கூச்சலிட்டனர். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இருப்பினும் அந்த ரயிலில் சிக்கி சுதாகர் பலியானார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை