வாசகர்கள் கருத்துகள் ( 1 )
JeevaKiran
அக் 28, 2024 15:54
வயநாடு சம்பவம் தொடர்கிறது
திருப்பத்துார் : திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாது மலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் திருப்பத்துாரிலிருந்து, 46 கி.மீ., தொலைவுள்ள காவலுார் வரை, 20 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், சாலைகளில் சரிவால் ஏற்பட்ட மண், நீர்,பாறைகள் குவிந்ததால் புதுார் நாடு, வடுதலம்பட்டு, நெல்லிவாசல் நாடு, கம்புகுடி நாடு உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை, வருவாய் துறை அதிகாரிகள், நேற்று காலை முதல் பொக்லைன் இயந்திரம் வாயிலாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வயநாடு சம்பவம் தொடர்கிறது