உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / வீட்டின் மீது இடி தாக்கி மின்பொருட்கள் எரிந்து நாசம்

வீட்டின் மீது இடி தாக்கி மின்பொருட்கள் எரிந்து நாசம்

திருப்பத்துார், திருப்பத்துாரில் வீட்டின் மீது, இடி தாக்கியதில், மின்பொருட்கள் எரிந்து நாசமாயின. திருப்பத்துார் மாவட்டம், வண்ணான்குட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி பிச்சாண்டி, 56. இவரது மகன் ராஜா, 34. இவர், மனைவி, குழந்தைகளுடன் தரைத்தளத்திலும், பிச்சாண்டியும் அவரது மனைவி இந்திராவும் முதல் மாடியிலும் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் பலத்த இடியுடன் மழை பெய்தது.அப்போது பிச்சாண்டி வீட்டின் மீது இடி தாக்கியதில், வீட்டிலிருந்த, 'டிவி' உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. அதிர்ச்சியடைந்த அனைவரும் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தனர்.தீப்பிடித்து எரிந்த மின்சாதன பொருட்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன், நீரை ஊற்றி அணைத்தனர். மின்சாரம் துண்டிப்பு செய்த நேரத்தில், வீட்டின் மீது இடி இறங்கியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. திருப்பத்துார் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ