உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / பள்ளிக்கு பெற்றோர் பூட்டு

பள்ளிக்கு பெற்றோர் பூட்டு

வாணியம்பாடி: திருப்பத்துார் மாவ ட்டம், வாணியம்பாடி இந்திரா நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ ர்கள் படிக்கின்றனர். பள்ளி செல்லும் சாலை போக்குவரத்துக்கு லாயக் கற்றதாகி விட்டது. பள்ளியை சுற்றி புதர் மண்டியுள்ளது. அடிப் படை வசதி இல்லை. பெற்றோர் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தொடர் மழையால் தற்போது பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. மாணவர்களை நேற்று காலை பள்ளியில் விட வந்த பெற்றோர் இதை பார்த்து, பஞ்., நிர்வாகத்தை கண்டித்து, பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாணியம் பாடி டவுன் போலீசார் பேச்சு நடத்தி, சமாதானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !