உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ஆசிரியர் தாக்கி மாணவர் காயம்

ஆசிரியர் தாக்கி மாணவர் காயம்

ஆம்பூர்; திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கரும்பூரைச் சேர்ந்தவர் விவசாயி நாகராஜ் மகன் விஜயகுமார், 13. இவர், பெரும்பூர் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும், ஹிந்து மேல்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறார். இவர் சரிவர படிக்காமல், தேர்வும் சரியாக எழுதவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அறிவியல் ஆசிரியர் முருகதாஸ், தேர்வு எழுத பயன்படுத்தப்படும் அட்டையால் தாக்கியதில், மாணவன் விஜயகுமார் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள், மாணவனை மீட்டு ஆம்பூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !